பெட்டாலிங் ஜெயா | 4/1/2022 ;-
தற்பொழுது விலை உயர்வுப் படலம் அரங்கேறி வரும் நிலையில், வரிசையில் அடுத்ததாக இருப்பது எழுதுகோல்கள்.
இது குறித்து பேசிய மலேசிய எழுதுகோல்கள், புத்தகங்கள் விற்பனையாளர் சங்கங்களின் கூட்டமைப்புடைய தலைவர் டத்தோ தெய் தோங் சிங், கடந்த ஆண்டு முதலே கட்டம் கட்டமாக அவை விலையேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பிளாஸ்டிக் எழுதுகோல்கள் மிகப் பெரிய அளவிலான விலை அதிகரிப்பைச் சந்தித்துள்ளன.
இந்த விலையேற்றம் மிகவும் கடினமான முடிவு எனக் குறிப்பிட்ட அவர், போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு, மூலப் பொருட்கள் விலை உயர்வு, குறைந்த நாணய மாற்று ஆகியவற்றால் இது ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பெரும்பான்மையான எழுதுகோல்கள் பெட்ரோலியம் சார்ந்தப் பொருட்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் அதன் மூலப்ப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
வெளிநாட்டுப் போக்குவரத்துச் செலவு மட்டும் இல்லாமல் உள்நாட்டுப் போக்குவரத்துச் செலவும் உயர்ந்துள்ளது.
எனவே, நாங்களும் எங்களின் உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளது.
பெருந்தொற்றுக் காலத்தில் மக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு கட்டம் கட்டமாக விலையை உயர்த்தியுள்ளோம்,
பயனீட்டாளர்கள்ளுக்குச் சுமையை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகக் கட்டம் கட்டம்காக 5% முதல் 10% வரையில் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரிம 1.00 தூவல் (பேனா) தற்பொது ரிம 1.05 என விற்கப்படுகிறது. சில தரப்பினர் குறிப்பிடுவது போல 40 விழுக்காடு விலை உயர்வைச் செய்ய வில்லை.
Mr. DIY, ரிம 2.00 கடைகள் போன்ற கடைகளின் போட்டித் தமை அதிகமாக இருப்பதால் விலை அதிகரிப்புக் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெய் தோங் சிங் கூறினார்.


