சென்னை | 4/1/2022 :-

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் காலை நேரங்களில் பொதுவாகப் பனிமூட்டம் காணப்படும் என்று தமிழக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், இம்மாதம் 4 – 5 தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் குறிப்பிட்டுள்ளது.

06.01.2022: தென்தமிழகக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

07.01.2022: கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

08.01.2022: கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மூடுபனி எச்சரிக்கை : 

04.01.2022 முதல் 06.01.2022: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் காலை நேரங்களில் பொதுவாக பனிமூட்டம் காணப்படும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 29 குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

04.01.2022: குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்

05.01.2022: குமரிக்கடல். மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரியகையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.