Homeஅரசியல்தைப்பூசத் திருவிழாவில் இந்துக்கள் கூடுவது பாதுகாப்பானதா ? வெளிப்படையாக அறிவிக்கவும் ! - பொன். வேதமூர்த்தி

தைப்பூசத் திருவிழாவில் இந்துக்கள் கூடுவது பாதுகாப்பானதா ? வெளிப்படையாக அறிவிக்கவும் ! – பொன். வேதமூர்த்தி

கோலாலம்பூர் | 7/1/2022 :-

உலகம் முழுவதும் பரவி வரும் ஒமிக்ரோன் அச்சுறுத்தலுக்கு நடுவே தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாட இந்துக்கள் ஒன்று கூடலாமா என்பதை சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடீன் உறுதியளிக்க வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி  கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு திறந்த மடல் எழுதி 48 மணி நேரத்திற்கு மேலாகியும் இதன் தொடர்பில் கைரி ஜமாலுடின் அமைதி காத்து வருகிறார். அனைத்து மலேசியர்களுக்கும் இவர் அமைச்சர்.

நான் முன் வைத்தை கோரிக்கை மிகவும் முக்கியமானது. தைப்பூச விழா தொடர்பில் இந்துக்களின் பாதுகாப்பையும் நலனையும் மலேசிய அரசாங்கம் உறுதி செய்வதுடன்  தைப்பூச விழா தொடர்பில் வரையப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

பிரதமருக்கு நான் அனுப்பிய கடிதம், அத்துடன் இந்துக்களின் பாதுகாப்பு குறித்து முழுமையாக பரிசீலிக்கும்படி நான் கேட்டுக் கொண்டது குறித்தெல்லாம சுகாதார அமைச்சர்  ஒன்றும் தெரிவிக்காமல் இருக்கிறார்.

“ஓமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பயணிகளும் மலேசியர்களும் இங்கு திரும்புகின்றனர். அனைத்து உயிர்களையும் எப்படியாவது  பாதுகாப்பதுடன் தைப்பூசத் திருநாள் ஏதும் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டியதும் நம் கடமையாகும். 

தவிர ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழா தலங்களுக்குச் செல்லவும் வரவும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே ,  இந்து பக்தர்களின்மீது மட்டுமல்ல; அனைத்து மலேசியர்களின் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு இதை முன்வைக்கிறேன் என்று வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்

எனவே, பக்தர்கள் மற்றும் அனைத்து மலேசியர்களின் நல்வாழ்வுக்காக வரையப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்வதாக ஒற்றுமைத் துறை முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

spot_img

latest articles

explore more