spot_img
11.8 C
London
spot_img
Home மலேசியா கல்வி பாடநூல்கள் வெள்ளத்தால் சேதம் : இழப்பீடு செலுத்தத் தேவையில்லை ! – கல்வி அமைச்சர்

பாடநூல்கள் வெள்ளத்தால் சேதம் : இழப்பீடு செலுத்தத் தேவையில்லை ! – கல்வி அமைச்சர்

0
306

புத்ராஜெயா | 7/1/2022 :-

அடுத்த வாரம் பள்ளிக் கூடங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில் வெள்ளத்தால் சேதமடைந்த பாட நூல்களுக்கு மாணவர்கள் இழப்பீடு செலுத்தவோ அல்லது புதிய புத்தகத்தை மாற்றாக வாங்கவோ வேண்டாம் என கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் தெரிவித்தார்.

இது நாள் வரையில், நாடு முழுவதும் 14,422 மாணவர்களின் 263,662 புத்தகங்கள் வெள்ளத்தாப் சேதமடைந்துள்ளதாக கல்வி அமைச்சு கூறியது.

மாணவர்களின் கற்றல் கற்பித்தல் தடையின்றி நடக்க கல்வி அமைச்சிடம் போதுமானப் பாட நூல்கள் இருப்பதாகவும் ரட்ஸி ஜிடின் சொன்னார்.

சில மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பல மாணவர்களின் பாடநூல்கள் சேதமடைந்துள்ளன. இது குறித்து பல கேள்விகள் பரவலாக எழுந்துள்ள நிலையில் கல்வி அமைச்சர் இந்தத் தகவலைக் காணொலி மூலம் வெளியிட்டுள்ளார்.

புதியப் பாட நூல்களை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கும் முன்னர், அவற்றின் எண்ணிக்கையை பதிவு செய்வார்கள் எனவும் ரட்ஸி ஜிடின் தெரிவித்தார்,