Homeஉலகம்சுற்றுச் சூழலுக்குப் பாதகமில்லாத விடாய்க்கால அணையாடை ! – மலேசியப் புவி அழகி டாக்டர் நிஷாவின்...

சுற்றுச் சூழலுக்குப் பாதகமில்லாத விடாய்க்கால அணையாடை ! – மலேசியப் புவி அழகி டாக்டர் நிஷாவின் அரிய சாதனை

புத்ராஜெயா | 26/4/2022 :-

தொழில்நுட்பங்கள் வளர்ந்துவரும் காலத்தில் அன்றாடப் பழக்க வழக்கங்களில் பெரும்பாலானோர் பாரம்பரியத்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர். மண் பாத்திரத்தில் சமையல், குடிநீர் என மாறிவரும் இளம் தலைமுறையினர் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துத் துணிப்பைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், துணி நாப்கின்கள் பயன்பாடு இன்றைய தலைமுறைப் பெண்களிடையே அதிகரித்து வருகிறது.

மாதவிடாய் நாட்களில் தொடர்ச்சியான சானிட்டரி நாப்கின்கள் என்று கூறப்படும் விடாய்க்கால அணையாடை பயன்பாட்டால் ஒவ்வாமை, அரிப்பு, தடிப்பு ஆகிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நறுமணத்தை ஊட்டுவதற்காகவும் வெண்மைத் தன்மையை உருவாக்குவதற்காகவும் சேர்க்கப்படும் வேதிப்பொருட்களால் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

இது தவிர்த்து விடாய்க்கால அணையாடைகளால் சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுகிறது. நிலத்தில் கொட்டப்படும் விடாய்க்கால அணையாடை தானாக மட்குவதற்கு 800 ஆண்டுகள் வரைகூட ஆகலாம். இவற்றை எரிப்பதாலும் காற்று மாசு ஏற்படுகிறது. பெருநகரங்களில் குப்பைகளில் வீசப்படும் விடாய்க்கால அணையாடைகளைக் கையாள்வதிலும் சிக்கல் உள்ளது.

பல கோணங்களில் ஏற்படும் இவ்வாறான சிக்கல்களைத் தனது சவாலாகக் கொண்டு அதனைக் கையாளும் முயர்சியில் இறங்கியுள்ளார் 29 வயது மலேசிய மருத்துவர் நிஷா தயானந்தன்.

கடைகளில் கிடைக்கும் விடாய்க்கால அணையாடைகளில் 90 விழுக்காடு பிளாஸ்டிக்தான். இது மக்கிப்போக நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கூட ஆகலாம் எனக் கூறும் டாக்டர் நிஷா, இந்தக் கழிவுகள் முறையாகக் கையாளப்படவிட்டால் பல சுற்றுச் சூழல் தூய்மைக்கேட்டை விளைவுக்கும் என்கிறார்.

பல மாதங்கள் மேற்கொண்ட ஆய்வுகளுக்குப் பிறகு, தனது முயற்சியின் வெற்றி பெற்றிருக்கிறார் டாக்டர் நிஷா. சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பயன் விளைவிக்கிறாது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடும் வகையில் Ecopad எனப் பெயரிட்டுள்ளார்.

பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத இந்த மாத விடாய்க்கால அணையாடை 216 மணி நேரத்தில் மக்கிப் போகும் தன்மை கொண்டது. (படம் : மோகன்ராஜ் வில்லவன்)

இவை 100 % பஞ்சால் ஆனவை. பிளாஸ்டிக், டைஆக்சின், ஹெர்பிசைட், குளோரின், வாசனை ஆகியவற்றுடன் பெண்கள் உடலுக்கு ஒவ்வாமையையும் சுகாதாரப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தக் கூடிய ஏற்படுத்தக் கூடியவை அல்ல.

தற்போது சந்தையில் இருக்கும் மாதவிடாய்க்கால அணையாடைகளைப் போல் இல்லாமல் 216 மணி நேரத்தில் மக்கிப் போகும் தன்மையைக் கொண்டது.

பெண்களின் மாதவிடாய்க்காலத்தை உட்படுத்திய அவர்களின் வாழ்க்கைத் தரத்தை சுகாதாரமிக்கதானதாக மாற்றவும் தான் எண்ணம் கொண்டுள்ளதாக மலேசியப் புவி அழகி எனும் பட்டத்தை வென்ற சிரம்பானை சொந்த ஊராகக் கொண்ட டாக்டர் நிஷா சொன்னார்.

சரவாக் மாநிலத்தில் வறுமை நிலையில் இருக்கும் பெண்களுடன் பணிபுரியும் போது சுற்றுச் சூழலுக்குப் பாதகமில்லாத மாதவிடாய்க்கால அணையாடையை உறுவாக்கும் எண்ணம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

சுத்தமான சுகாதார வாழ்க்கைக்கானப் பொருட்களை அவர்களால வாங்கக் கூடிய நிலையில் இல்லாமல் பஐய துணிகள், நாளிதழ்கள், தேங்காய் நார் ஆகியவற்றை பயன்படுத்தும் அவல நிலையைத் தாம் கண்டதாகவும் மனம் திறந்தார்.

இது மிகவும் ஆபத்தானப் பழக்கம் என்றும் பலவிதமான சுகாதாரப் பிரச்சனைகள் மட்டும் இல்லாமல் மரணம் கூட நேரலாம் என்றார்.

ஏழ்மையும் குறைவான கல்வியும் அவர்களின் இந்த நிலைக்குக் காரணம். மலிவான இந்த மாத விடாய்க்கால அணையாடையை வறுமை நிலையில் வாழும் அனைத்துப் பெண்களுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

 தாம் சந்தைக்குக் கொண்டு வந்துள்ள இப்ப்புதிய மாதவிடாய்க் கால அணையாடையின் ஒவ்வொரு பெட்டியை வாங்கும் போதும், அதில் ரிம 1.00 வறுமை நிலையில் இருக்கும் பெண்களின் மாதவிடாய்க் கால அணையாடையை வழங்க உதவும் எனவும் குறிப்பிட்டார்.

A box of 10 biodegradable RM15
A box a box of 20 pantyliners RM12

அனைத்துலக நிலையிலான அனைத்து மருந்தகங்களிலும் இவரது புத்தாக்கக் கண்டு பிடிப்பான Ecopad விடாய்க்கால அணையாடை கிடைக்க வேண்டும் என்பதே நமது கனவு என டாக்டர் நிஷா சொன்னார்.

மே மாத இறுதியில். தாம் தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்று பெண்களின் சுகாதாரம் குறித்து பேசசும் Ecopad அணையாடைகளை விநியோகிக்கவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் வறுமை நிலையில் இருக்கும் பலரின் சுகாதாரமான வாழ்க்கை மேம்பாடடைய தமது கண்டுபிடிப்பான Ecopad உதவும் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் டாக்டர் நிஷா சொன்னார்.

Ecopad குறித்த மேல் விவரங்களுக்கு அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் நாடலாம்.

spot_img

latest articles

explore more