கோலாலம்பூர் | 17/06/2022

மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் மலேசியா முழுவதும் இப்பேச்சாளர் பயிற்சிப் பட்டறை நடத்தப்படும். பேச்சாளர்களின் வசதிக்கு ஏற்ப அவர்தம் அருகாமையில் இப்பட்டறை நடத்தப்படும்.

  1. பேச்சாளர்களுக்குப் பேச்சாற்றல் பட்டறை
  2. ஆசிரியர்களுக்கு உரைப் படிவம் தயாரிக்கும் வழிகாட்டல்
  3. பயிற்றுநர் பட்டறை
  4. சொற்போர்ப் பயிற்சிப் பட்டறை

இப்பேச்சாளர் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க விரும்புவர்கள் பதிவுப் படிவத்தைப் பூர்த்தி செய்து , தொலைவரிக் குழுவில் இணையவும். அடுத்தடுத்த பட்டறைக்கான விவரங்கள் தொலைவரிக் குழுவில் பகிரப்படும்.

பதிவுப் படிவம்
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScMgak7bCOULZtJYyTN2Ho_V6ZUhjQXi1vdJf4eAL9qXvMFnw/viewform?usp=pp_url

மேற்கண்ட பயிற்சிகள் அனைத்தும் இலவசமாக நடத்தப்படவுள்ளது. இப்பேச்சாற்றல் பயிற்சிப் பட்டறை மலேசியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்படும். அனைவரும் நேரடியாகவும் இயங்கலை வாயிலாகவும் பங்கேற்கலாம். நேரடியாகப் பட்டறையில் பங்கெடுத்தவர்களுக்குச் சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்படும்.

தமிழ்ப்பள்ளிகள் பட்டறைக்கான இடத்தையும் வசதியும் ஏற்பாடு செய்யும் எண்ணம் கொண்டால் 0122443010 எனும் எண்ணுக்கு அழைக்கவும். [செலவுகள் அனைத்தும் மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றம் ஏற்கும்]

*தங்கள் பள்ளி மாணவர்களுக்காகப் பயிற்சிப் பட்டறை நடத்த எண்ணம் கொள்ளும் பள்ளி நிர்வாகம் நேரடியாக 0122443010 தொடர்பு கொள்ளலாம்.

நன்றி
மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றம்