கலும்பாங், ஜூன் 20-

கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை அமைத்துத் தர வேண்டுமென்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட மை ஸ்கில் அறவாரியம், J.P. Morgan குழுமத்துடன் தொடர்ச்சியான கூட்டமைப்பை மீண்டும் தொடர்கின்றது.

J.P. Morgan ஆதரவில் 400 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 24 மாதங்களுக்கான பயிற்சியை மை ஸ்கில் அறவாரியம் முன்னெடுக்கவிருக்கின்றது. இதில் மின்சாரம், குழாய் பழுது பார்க்கும் துறை, பராமரிப்பு, குளிரூட்டி சேவைக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

J.P. Morgan அதிகாரிகளுடன் மை ஸ்கில் அறவாரியத்தின் பொறுப்பாளர்கள்

இத்துறைகளில் நிறுவன செயலர், பராமரிப்பு போன்றவற்றில் புதிய திட்டங்களையும் செயல்திறன்களையும் வழங்குகின்றது. இது இளைஞர்களுக்குத் தகவல், தொடர்பு, தொழில்நுட்ப திறன்களை அதிகரிக்கும். அதோடு இணையப் பாதுகாப்பு சார்ந்த துணைக் பாடத் திட்டங்களும் இதில் அடங்கும். மேல் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்குத் தனியார் பயிற்சி உள்ளிட்ட கூடுதல் ஆதரவும் வழங்கப்படுகின்றது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக அனைத்து தர மாணவர்களும் தங்களின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்குத் தேவையான திறன்கள் நுணுக்கங்கள் வழங்கப்படுவது உறுதிசெய்யப்படுமென J.P. Morgan மலேசியாவின் மூத்த அதிகாரி ஹூய் சிங் வோங் நம்பிக்கை தெரிவித்தார்.

“நமது சமூகத்திற்குள் சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்குக் கல்வியின் பங்கு அளப்பரியது. மேலும் மை ஸ்கில் உடனான இந்த உடன்பாடு செயலில் ஒரு எடுத்துக்காட்டு. அதிகமான இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சியுடன் தொழிற்திறனையும் இணைப்பது எதிர்கால வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும். மேலும் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும்.”

J.P. மோர்கன் – MySkills முதன்முதலில் 2018 இல் இணைந்து பின் தங்கிய 300 இளைஞர்களுக்கு மின்சாரம், குழாய் பழுது பார்க்கும் துறை, பராமரிப்பு, குளிரூட்டி சேவைக்கான பயிற்சிகளை வழங்கியது. இந்த 2 ஆண்டுக்கால திட்டத்தின் வாயிலான பட்டம் பெற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பும் கண்டறியப்பட்டது.

பயிற்சிப் பெற்ற மாணவர்களின் செயல்திறனை J.P. Morgan மலேசியாவின் மூத்த அதிகாரி ஹூய் சிங் வோங் பார்வையிடுகிறார். அருகில் பசுபதி

பின் தங்கிய நிலையிலிருந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உட்படப் பாதுகாப்பதற்கான மதிப்புமிக்க திறன்களைப் பெற உதவியது மட்டுமல்லாமல், தொழில்நுட்பம், தொழிற்கல்வி அதோடு பயிற்சி (TVET) தொடர்பான திறன்களுடன் திறமையானவர்களை பணியமர்த்துவதில் நாட்டின் இடைவெளியை இந்த முயற்சியானது நிவர்த்தி செய்தது.

“2018 ஆம் ஆண்டில் 300 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க ஜே.பி. மோர்கனுடனான கூட்டு முயற்சியானது, மைஸ்கில்ஸின் மாற்றத்திற்கான பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருந்தது.”

குறிப்பாக கோவிட் 19 காலகட்டத்தில் அனைவரும் சவாலாகத் தருணத்திலிருந்தோம். ஆனால் அனைத்து ஆதரவாளர்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பும் இளைஞர்களுக்கான பயிற்சி தொடர்வதற்கு உறுதுணையாக இருந்தது என மை ஸ்கில் அறவாரியத்தின் நிறுவனரும் இயக்குநருமான பசுபதி சிதம்பரம் கூறினார்.

இந்த மிகவும் அர்த்தமுள்ள, முக்கியமான திட்டத்தில் MySkills மீது நம்பிக்கை வைத்ததற்காக J.P. மோர்கனுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.