Homeசமூகம்வசதியற்ற 200 மாணவர்களுக்கு இலவச மடிக் கணினிகள்! -டத்தின் படுக்கா டான் யீ கியூ வழங்குகிறார்

வசதியற்ற 200 மாணவர்களுக்கு இலவச மடிக் கணினிகள்! -டத்தின் படுக்கா டான் யீ கியூ வழங்குகிறார்

வாங்சா மாஜூ, ஜூன் 27-

வாங்சா மாஜூ நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த வசதி குறைந்த பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் மடிக் கணினிகளைக் கொண்டிருக்கும் வகையில் இதன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தின் படுக்கா டாக்டர் டான் யீ கியூ இவர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகளை வழங்க முன் வந்துள்ளார்.

கோவிட்- பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் இயங்கலை வாயிலாக கல்வியைத் தொடர வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், கல்வி அமைச்சரும், உயர் கல்வி அமைச்சரும் கணினி இன்றி மாணவர்கள் இயங்கலை வழி பயில முடியாது என்ற உண்மையைப் புறக்கணித்தனர். ஒரு வருடம் மாணவர்கள் இயங்கலை வாயிலாகவே கல்வி கற்றனர்.

தற்போது பொருட்கள் விலையேற்றத்தைத் தொடர்ந்து தங்கள் பிள்ளைகளுக்கு கணினி வாங்கிக் கொடுப்பதில் பெற்றோர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் பிள்ளைகள் கல்வியைத் தொடர்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

இச்சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு தனக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீட்டில் பெரும் பகுதியை இவ்வட்டாரத்தைச் சேர்ந்த 5ஆம் படிவ மாணவர்கள் உட்பட 200 மாணவர்களுக்கு மடிக் கணினிகளை வாங்க தாம் முடிவு செய்ததாக யீ கியூ கூறினார்.

குடும்ப வருமானம் 5000 வெள்ளிக்குக் குறைவாக இருக்கும் வாங்சா மாஜூவைச் சேர்ந்த மாணவர்கள் https://forms.gle/qg4JrUEf7UGJksN39 வழி இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.

இவர்கள் http://shorturl.at/fkBJN வாயிலாகவும் பாரங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட பாரங்களை ஜூலை 10 ஆம் தேதிக்குள் கீழ்க்காணும் முகவரியில் ஒப்படைத்து விட வேண்டும்

Pusat Khidmat Ahli Parlimen Wangsa Maju,
20-2,Tingkat 2,
Blok B, Platinum Walk,
Jln Ibukota Off Jln Genting Klang,
Wangsa Maju
53300 Kual Lumpur.
மேல் விவரங்களுக்கு புவான் லிண்டாவுடன் 011-62191775 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

spot_img

latest articles

explore more