சிங்கப்பூர், ஜூன் 30-

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு 9 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்த மலேசியாவைச் சேர்ந்த 32 வயதான கல்வந்த் சிங்கிற்குச் சிங்கப்பூர் அரசாங்கம் ஜூலை 7ஆம் தேதி மரணதண்டனை நிறைவேற்றவுள்ளது.

கேமரன் மலையைச் சேர்ந்த கல்வந்த், 23 வயதாக இருந்தபோது, சிங்கப்பூருக்கு 60.15 கிராம் டயமார்பைன் (diamorphine) கடத்தியதாகக் கைது செய்யப்பட்டார் என மலேசிய மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்த தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறியது.

முக்கியமாக இணை குற்றம் சாட்டப்பட்ட நபரின் சாட்சியத்தின் பேரில் தண்டிக்கப்பட்ட கல்வந்த், தான் எடுத்துச் சென்ற மூட்டைகளில் போதைப்பொருள் இருந்தது என்று தனக்கு ஒருபோதும் தெரியாது என்று கூறுகிறார் என்று தொண்டுழிய வழக்கறிஞர்கள் இன்று ஜூன் 30 அன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.

42.7 கிராம் ஹெராயின் கடத்தியதாக மற்றொரு மலேசியரை சிங்கப்பூர் தூக்கிலிட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு கல்வந்தின் மரணதண்டனை அறிவிப்பு வந்துள்ளது.

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் நிதி மற்றும் சுகாதாரக் காரணங்களால் இரண்டு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

கல்வந்தின் சகோதரி சோனியா உறவினர் கெல்வினா இறுதியாகச் சிங்கப்பூர் சென்றபோது, திங்கட்கிழமை அவரைப் பார்த்த பிறகு, செவ்வாய்கிழமை கூடுதல் வருகைக்கு அனுமதி கேட்டார்கள், ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.

மரணத் தண்டனை கைதிகளுக்கான பார்வையாளர் வருகைகள் பொதுவாகச் சனி, திங்கட்கிழமைகளில் மட்டுமே என்று சிங்கப்பூரை தளமாகக் கொண்ட சீர்திருத்த குழு தெரிவித்துள்ளது. இது அவர்களின் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 27 அன்று, 34 வயதான நாகேந்திரன் கே தர்மலிங்கத்தைச் சிங்கப்பூர் அரசாங்கம் தூக்கிலிட்டது. துரதிர்ஷ்டவசமாகச் சிங்கப்பூர் தூக்கிலிடப்படவுள்ள மலேசியர்களின் நீண்ட பட்டியலில் கல்வந்த் அடுத்த இடத்தில் உள்ளார்.

2016 முதல், சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றங்களுக்காக ஐந்து மலேசியர்கள் தூக்கிலிடப்பட்டனர்.