லங்காவி, ஜூன் 30-

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், தனது லங்காவி நாடாளுமன்றத் தொகுதியைப் தற்காக்க அடுத்த பொதுத் தேர்தலில் (GE15) போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

பெஜுவாங் கட்சியில் பல வேட்பாளர்களைத் அந்தத் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்கள், அந்த போட்டியிட தகுதியானவர்கள் யார் என்பதை முடிவுச் செய்ய முடியவில்லை என்றால் தாம் போட்டியிடத் தயாராக இருப்பதாக 96 வயதான மகாதீர் கூறினார்.

“எங்களிடம் வேட்பாளர்கள் உள்ளனர், அவர்களை இன்னும் பெயர்களை பட்டியலிட முடியாது,” என்று அவர் AstroAwani இடம் கூறினார்.

“(வேறு பொருத்தமான தேர்வு) இல்லையெனில் (நான் லங்காவியில் போட்டியிட) மக்கள் பரிந்துரைத்தால், நான் அதை பரிசீலிப்பேன்” என்று நேற்றிரவு லங்காவியில் உள்ள குவாவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் படகு நடத்துனர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு, அவர் இவ்வாறு கூறினார்.

க்தனது மோசமான உடல்நிலை, வயதைக் காரணம் காட்டி, 15ஆவது பொதுத் தேர்தலில் தனது லங்காவி நாடாளுமன்றத் தொகுதியைப் பாதுகாப்பதில்லை என்று முடிவு செய்ததாக மார்ச் மாதம் மகாதீர் கூறியிருந்தார்.