கோலாலம்பூர், அக்.20-
தமது சிகாம்புட் நாடாளுமன்ற தொகுதியை மூடா கட்சியிடம் ஒப்படைக்கும்படி இத்தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பக்காத்தான் ஹராப்பானுடன் தொகுதி பங்கீடு குறித்த மூடா கட்சியின் அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தை செயல் வடிவம் காணாவிட்டால் அக்கட்சி இத்தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று ஹன்னா இயோ தனது டுவீட்டரில் பதிவு செய்தார்.


இதனைத் தொடர்ந்து தமது சிகாம்புட் நாடாளுமன்ற தொகுதியை மூடா கட்சியிடம் தாரை வார்க்கும்படி ஹன்னா இயோவை அவரின் டுவீட்டரைப் பின்பற்றுவோர் கேட்டுக் கொண்டனர்.


இந்தத் தொகுதியை எவரிடமும் ஒப்படைப்பதற்குத் தனக்கு அதிகாரம் கிடையாது என்றும் மாறாக இதனை முடிவு செய்யும் அதிகாரம் ஜ.செ.க.தலைமைத்துவத்திடமும் சிகாம்புட் வாக்காளர்களிமே உள்ளது என்றார்.