ஈப்போ, அக்.20-
பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் தம்புன் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.


எளிதாக வெற்றி பெறும் தொகுதியைத் தாம் தேர்ந்தெடுக்கவில்லை என்று தம்புன் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவிருப்பதாக அறிவிக்கையில் அன்வார் குறிப்பிட்டார்.


“எளிதில் வெற்றி பெறக்கூடிய தொகுதியை நான் தேர்ந்தெடுக்கவில்லை. மிகப் பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும்.மிகப் பெரிய கூட்டணி கட்சியை வழிநடத்துகின்ற நிலையில் வரும் பொதுத் தேர்த்லில் தம்புன் நாடாளுமன்ற தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று தைரியத்துடன் கூறுகிறேன்” என்றார் அன்வார்.


15ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெறுமேயானால் அன்வாரே பிரதமர் வேட்பாளர் என இக்கூட்டணியின் தலைமைச் செயலாளர் சைஃபுடின் நசத்தியோனை மேற்கோள் காட்டி ஃபிரி மலேசியா டுடே செய்தி வெளியிட்டது.