Homeதேர்தல்ஜெலுத்தோங் நாடாளுமன்றத் தொகுதி: ஐபிஎஃப் போட்டி

ஜெலுத்தோங் நாடாளுமன்றத் தொகுதி: ஐபிஎஃப் போட்டி

செர்டாங், நவ. 3-
      வரும் 15ஆவது பொதுத் தேர்தலில்
ஜசெகவின் கோட்டை என வருணிக்கப்படும் ஜெலுத்தோங் நாடாளுமன்றத் தொகுதியை இம்முறை தேசிய முன்னணி கைப்பற்றும் வகையில் ஐபிஎஃப் கட்சி களம் இறங்கும்  என்று அதன் தலைவர் டத்தோ லோகநாதன் தெரிவித்தார்.

    தேசிய முன்னணியின் கீழ்  ஐபிஎஃப்  வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இது ஐபிஎஃப் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் ஆகும். தங்களின் 32 ஆண்டுகால போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும் என்றார் அவர்.

     ஜெலுத்தோங் தொகுதியின் தேமு வேட்பாளராக தாம் களமிறங்கும் நிலையில் அங்கு வெற்றியை உறுதி செய்ய கட்சி தீவிர பிரச்சாரத்தில் இறங்கும் என்றும் அவர் விவரித்தார்.

        ஜசெகவின் கோட்டையாக ஜெலுத்தோங் தொகுதி முன்பு இருந்திருக்கலாம். ஆனால் இனி வரும் காலம் அத்தொகுதி தேமு வசமாகும் வகையில்  ஐபிஎஃப் கட்சி கடுமையாகப் பாடுபடும் என்றும் லோகநாதன் விவரித்தார்.

       மக்கள்  மாற்றத்தை விரும்பும்  சூழலில் இனி அங்கு தேமுவின் கொடி நிலை நாட்டப்படும். வரும்  பொதுத் தேர்தலில் ஜெலுத்தோங் தேசிய முன்னணி வசமாகும் என்று இங்குள்ள ஐபிஎஃப் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்  டத்தோ லோகநாதன் பேசினார்.

        இச்செய்தியாளர் கூட்டத்தில்  ஐபிஎஃப் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ வேலாயுதம் இளைஞர் அணித் தலைவர் மகேந்திரன், மகளிர் தலைவி திருமதி ராஜம்மா உட்பட கட்சி பொறுப்பாளர்கள்  கலந்து கொண்டனர்.

spot_img

latest articles

explore more