திங்கள், 23 ஜனவரி
வீரா (புதிய அத்தியாயங்கள் – 19-22)
ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 9 மணி, திங்கள்-வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்.
நடிகர்கள்: தீபன் கோவிந்தசாமி, ஷர்மேந்திரன் ரகோநாதன், தாஷா கிருஷ்ணக்குமார் & ஷாமினி ஷ்ரதா 
வீராவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

வியாழன், 26 ஜனவரி
குட் லக் ஜெரி (Good Luck Jerry) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்.
நடிகர்கள்: ஜான்வி கபூர், தீபக் டோப்ரியால் & நீரஜ் சூட்
போதைப்பொருள் கடத்தல் தொழிலிற்கு ஈர்க்கப்படும் ஓர் அப்பாவிப் பெண்ணின் கதை.

வெள்ளி, 27 ஜனவரி
பபூன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: வைபவ் ரெட்டி, அனகா எல்.கே. & அந்தக்குடி இளையராஜா
இரண்டு கூத்துக் கலைஞர்கள் அரசியல் அதிகார விளையாட்டினால் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பொய்யாகச் சிக்க வைக்கப்படுகின்றனர்.

குறி II சீசன் 2 (புதிய அத்தியாயம் – 12)
ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 8 மணி, வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
தொகுப்பாளர்: ஹரிதாஸ்

31 வயதான கணேசன் என்ற லாரி ஓட்டுநர் ஆயுதமேந்திய நான்கு நபர்களால், அதிகாலை 3.00 மணியளவில் தனதுக் குடியிருப்பில் தாக்கப்பட்டார். ஏழு வெட்டுகள் மற்றும் பலக் குத்துக்காயங்களுக்குப் பிறகு அடுக்குமாடி வீட்டிற்கு வெளியே உள்ள நடைப்பாதையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 34 வயது மனைவியும், அவரது 22 வயதுக் காதலரும் 16 வயதுடைய இரு மாணவர்களையும் மேலும் இரு ஆண்களையும் வேலைக்கு அமர்த்தி, ஒவ்வொருவருக்கும் தலா 5000 ரிங்கிட் கொடுத்து கொலையைச் சதித்திட்டம் தீட்டியதாக காவல்துறை புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.