மாற்றுத் திறனாளிகள் தன்னிலை பயிற்சி மையத்தின் விருந்து நிகழ்ச்சி!துணையமைச்சர் சரஸ்வதி சிறப்பு வருகை

92

ரவாங், செப்.13-

இங்குள்ள மலேசிய  மாற்றுத் திறனாளிகள் தன்னிலை பயிற்சி மையத்தின் நிதி  திரட்டும் விருந்துபசரிப்பு நிகழ்ச்சி அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ரவாங், ஃபூக் ஷெங் உணவகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி சிறப்பு வருகை புரிந்தார்.

இந்நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்கு ஆதரவு வழங்கிய நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு மலேசிய  மாற்றுத் திறனாளிகள் தன்னிலை பயிற்சி மையத்தின் பொறுப்பாளர் ஜி.சிவசங்கரராவ் (பிரான்சிஸ் சிவா) நன்றி தெரிவித்தார்.

“இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ஆதரவு தருவதற்காக சிறப்பு வருகை புரிந்த துணையமைச்சருக்கும் இப்பயிற்சி மையத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் அவர்.

செவிக்கினிய இன்னிசை நிகழ்ச்சியுடன் கூடிய இந்நிகழ்ச்சியில்  250 பேர் கலந்து கொண்டனர்.