பத்துமலை, செப்.14-
மலேசிய தமிழ்ச்சமயப் பேரவையின் ஏற்பாட்டில் நான்காவது தமிழ்ச்சமய மாநாடு 2023 எதிர்வரும் 16.09.2023 காரிக்கிழமை காலை 9.30 மணி முதல் 4.30 மணி வரை பத்துமலை திருமுருகன் திருக்கோவில் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளதால் மலேசிய தமிழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு மலேசிய தமிழ்ச்சமயப் பேரவை பேரழைப்பு விடுக்கிறது.
தமிழால், தமிழரால் மெய்யியல் கண்டு, உலக இயற்கையையும் அறிவியலையும் உணர்ந்து, பகுத்து வகுத்து அமைத்த, தமிழ்ச்சமய நிலைகளின் உயர்ந்த வாழ்வியல் வழிமுறைகள், நெறிமுறைகள் மற்றும் தமிழர்களுக்கே உரிய உன்னத மரபுகளைக் கடைபிடித்துக் கற்பிக்கப்பட்டதை, வழி வழியே காத்தும் பற்றியும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டிய தார்மீகக் கடமையில் மலேசிய தமிழ்ச்சமயப் பேரவை களம் கண்டு வருகிறது.
அவ்வகையில் அறிவில் சிறந்த, இயற்கையில் இணைந்த, மெய்யறிவு பரந்த, இறைஞானம் நிறைந்த, தூய மாந்தநேயமும் ஆன்மநேயமும் அமைந்த தமிழ்ச் சமயத்தைக் காத்துத் தாய்த்தமிழிலேயே வழிபாடு என தமிழ்ச்சமய தொன்மையைப் பறைசாற்றுவதோடு “தமிழ்ச்சமயம் தமிழரின் தாய்ச்சமயம்”, எனும் கருப்பொருளில் ஆய்வு விளக்கத்தோடு இம்மாநாடு அரங்கேற இருக்கிறது.
இம்மாநாட்டிற்குச் சிறப்பு வருகையாளராக பத்துமலை திருத்தல தலைவரும் தமிழ்ச்சமய மறுமலர்ச்சி ஆர்வலருமான மாண்புமிகு தான் சிறி ஆர்.நடராஜா அவர்களும், தமிழ்நாட்டிலிருந்து செந்தமிழ் வேள்விச் சதூரர், முதுமுனைவர், தமிழ்ச்சமய பேரறிஞர் சக்திவேல் முருகனார் அவர்களும், தமிழியல் பேரறிஞரும் மூலப் பெருந்தமிழ் மரபு தந்தையுமான தமிழ்த்திரு இர.திருச்செல்வனார் அவர்களும், சைவத்தமிழ்ப் பேரறிஞரும் திருமுறைச்செம்மலுமான தமிழ்த்திரு ந.தர்மலிங்கனார் அவர்களும், தமிழிறை ஆய்வு முனைவர் இளஞ்சோதியார் அவர்களும், மற்றும் தமிழர் தேசிய சிந்தனை வழக்கறிஞர் தமிழ்த்திரு பாலமுரளினார் ஆகியோர் பேருரையுடன் தமிழ்ச்சமய பரந்துரை, காணொளிகளும் இடம்பெறும்.
எனவே, இலவயமாக நடைபெறவிருக்கும் இம்மாநாட்டிற்கு நாட்டிலுள்ள தமிழர் தேசிய இயக்கங்கள், சங்கங்கள், அமைப்புகள், தமிழ்ச்சமய ஆர்வளர்கள், பற்றாளர்கள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் பண்பாட்டு உடையில் திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு மலேசிய தமிழ்ச்சமயப் பேரவை அன்புடன் அழைக்கிறது.
புலம்பெயர்ந்த உலகத் தமிழர்களுக்காக பேரவையின் முகநூல் மற்றும் வலையொளி தளத்தில் நேரலையும் இடம் பெறும்.
முகநூல் இணைப்பு
https://www.facebook.com/permalink.php?story_fbid=114584374299888&id=100072449785453
வலையொளி இணைப்பு
மீண்டும் யோசி / Meendum Yosi
https://youtube.com/@meendumyosi?si=t-IFiXDRHsSYPmHv
மலேசியா – 9.30 காலை
இந்தியா – 7.00 காலை
இலங்கை – 7.30 காலை
அமெரிக்கா – 9.30 இரவு
ஆசுரேலியா – 11.30 காலை
கனடா – 9.30 இரவு
இங்கிலாந்து – 2.30 அதிகாலை
தொடர்புக்கு :
திரு.மு.ஆனந்த தமிழன்
+60149327025
திரு.வீ.பாலமுருகன்
+60143099379