கோலாலம்பூர், செப்.18-
ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிசைன்களில் வடிவமைக்கப்பட்ட தங்க மூக்குத்திகளுடன் தலைநகர், மஸ்ஜிட் இந்தியாவில் இரண்டாவது கிளை நிறுவனத்துடன் பிரம்மாண்ட திறப்பு விழா கண்டது மூக்குத்தி பேலஸ்.
பேரா, ஈப்போவில் தொடங்கப்பட்டு வாடிக்கையாளர்களைக் கவர்வதில் கண்ட வெற்றியே இரண்டாவது கிளை நிறுவனத்தை தலைநகரில் பரபரப்புமிக்க இப்பகுதியில் தாங்கள் திறப்பதற்குக் காரணம் என்றார் மூக்குத்தி பேலஸ் நிறுவனத்தின் உரிமையாளரான டத்தின் ஹாஜ்ஜா சித்தி அய்ஷா அப்துல்லா.
“கடந்த ஒரு வருடத்தில் நாங்கள் அடைந்த சாதனை இது என்றே கூற வேண்டும். பெண்களுக்கு அழகு சேர்ப்பதற்கான ஆபரணமாக 1000 திற்கு மேற்பட்ட டிசைன்களில் மூக்குத்திகளை நாங்கள் வடிவமைத்துள்ளோம் . மூக்குத்திகளுக்காக பெண்கள் பல இடங்களில் தேடி சிரமப்படத் தேவையில்லை. மூக்குத்திகளைக் கொண்ட மாளிகையையே அவர்களுக்காக நாங்கள் உருவாக்கிக் கொடுத்துள்ளோம் ” என்றார்.
எங்கள் நிறுவனத்தில் குறைந்தபட்ச விலையான 30 வெள்ளியில் தொடங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ற விலையில் தரமான மற்றும் அவர்கள் விரும்பும் டிசைன்களில் மூக்குத்திகளை வாங்கி மகிழலாம் என்று இங்கு மூக்குத்தி பேலஸ் நிறுவனத்தின் இரண்டாவது கிளை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ திறப்பு விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.
“எங்கள் முதலாவது நிறுவனத்தில் மலாய்க்காரர்கள், சீனர்களைத் தவிர்த்து வெளிநாட்டவர்களும் மூக்குத்திகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது எங்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தருகிறது. அவ்வகையில் தலைநகர்வாசிகளும் எங்களுக்கு பேராதரவு வழங்குவர் என்று நாங்கள் நம்புகிறோம் ” என்றார் சித்தி அய்ஷா.
அதே சமயம், இந்தியர்களிடையே வரவேற்பு மேலும் அதிகமான கிளைகளைத் திறப்பதற்குத் தங்களுக்கு உற்சாகம் தந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
மூக்குத்தி அணிவதில் ஆர்வம் உள்ள பெண்கள் இந்நிறுவனத்தின் உறுப்பினர்களாகத் தங்களைப் பதிந்து கொண்டு சலுகை விலையில் மூக்குத்திகளை வாங்கி மகிழும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
மூக்குத்தி பேலஸ் நிறுவனத்தின் புதிய கிளை நிறுவனம் எண் 75, மேடான் போனுஸ், ஜாலான் மேடான் போனுஸ், ஆஃப் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா, கோலாலம்பூர் எனும் முகவரியில் செயல்படுகிறது.