spot_img
11.5 C
London
spot_img
Home மலேசியா கல்வி பியூட் தோட்ட தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பியூட் தோட்ட தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

0
281

சிப்பாங்,அக்.18-

இங்குள்ள பியூட் தோட்ட தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள்  ஏற்பாட்டில் ஒன்று கூடும் நிகழ்ச்சி அண்மையில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது.

‘ தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு’  என்ற கருப்பொருளோடு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது . இதில் சிறப்பு விருந்தினராக கவிமாறன் கலந்து கொண்டார்.

பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம், பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ஒத்துழைப்பை வழங்கினர்.

அதே நேரத்தில்,  அவர்களுடைய எல்லா செயல்பாடுகளுக்கும் எல்லோரும் உறுதுணையாக இருக்க வேண்டும் இந்தப் பள்ளியில் அதிகமான மாணவர்களைச் சேர்ப்பதற்கான வழிகளை நாம் செய்ய வேண்டும் என்பதை பற்றி  கவிமாறன்  இந்த நிகழ்ச்சியில் பேசியதோடு  மாணவர்களுக்கு தன்முனைப்பு உரையும் ஆற்றினார்.

 ” மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும்  தங்கள்  திறமையை வெளிப்படுத்தி  முன்னேற்றம் காண  முடியும் . இதனை பெற்றோர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும், பள்ளி நிர்வாகத்தோடும்  பெற்றோர் ஆசிரியர் சங்கத்தோடும் இணைந்து செயல்பட்டால் பள்ளி மிகப்பெரிய வளர்ச்சியை  அடையலாம்.  அனைவரும் இணைந்து செயல்படுவோம் “என்று தமதுரையில் குறிப்பிட்டார் கவிமாறன்.

இந்நிகழ்ச்சியில்  பிரமுகர்களுக்கு பாராட்டு செய்யப்பட்டது இனி ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக  நடைபெற ஏற்பாடு செய்யப்படும் என்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் குறிப்பிட்டார்.