ஷா ஆலம், நவ 3-
கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி நிலையிலான விருந்துடன் கூடிய தீபாவளி பொது உபசரிப்பு இம்மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தாமான் ஸ்ரீ மூடாவில் நடைபெறும்.
பல்வேறு நிகழ்வுகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பொது உபசரிப்பு ஸ்ரீ மூடா மைடின் பேரங்காடியின் கார் நிறுத்துமிட்டத்தில் இரவு 7.00 மணி தொடங்கி 11.00 மணி வரை நடைபெறும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தெரிவித்தார்.
இந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் விருந்துபரிப்புடன் ஆடல், பாடல், பரதம் உள்ளிட்ட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு வருகை புரியும் சிறப்பு பிரமுகர்களின் தீபாவளி வாழ்த்துரையும் இடம் பெறும். மேலும், இந்த உபசரிப்பில் கலந்து கொள்ளும் பொது மக்கள் அதிர்ஷ்டக் குலுக்கல் வாயிலாக கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்வதற்குரிய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டது.
இத்தொகுதியில் உள்ள இந்துக்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.




