Homeசமூகம்சுனாமி எச்சரிக்கை வெளியிடப்படவில்லை! -வானிலை ஆய்வு துறை தகவல்

சுனாமி எச்சரிக்கை வெளியிடப்படவில்லை! -வானிலை ஆய்வு துறை தகவல்

கோலாலம்பூர், நவ.4-

  தற்போதைக்கு எந்தவொரு சுனாமி எச்சரிக்கையையும் மலேசிய வானிலை ஆய்வுத் துறை வெளியிடவில்லை என்று அதன் தலைமை இயக்குநர், முகமட் ஹெல்மி அப்துல்லா தெரிவித்தார்.

  “இத்தகவலை நாங்கள் சபா, கோத்தா பெலுட்டில் இருக்கும் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை முறை (எஸ்.ஏ.ஏ.டி.என்.எம்.) அறிக்கையிலிருந்து இன்று அதிகாலையில் பெற்றோம்”.

  இச்சம்பவம் உண்மையில் தொழில்நுட்பக் கோளாறினால்தான் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இதற்கான தக்க நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  இந்நிலையில், இச்சம்பவத்தினால் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் அசௌகரியங்களுக்கு வானிலை ஆய்வுத் துறை மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக ஓர் அறிக்கையில் முகமட் ஹெல்மி குறிப்பிட்டார்.

-பெரித்தா ஹரியான்

spot_img

latest articles

explore more