கிள்ளான் பள்ளத்தாக்கில் காசநோயா? -மறுத்தார் டாக்டர் ஸாலேஹா

33

புத்ராஜெயா, நவ.18-

கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் காசநோய் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை மறுத்த சுகாதார அமைச்சர் டாக்டர் ஸாலேஹா முஸ்தபா, நிலைமை கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று தெரிவித்தார்.

இதில் தொற்றுநோய் ஏதும் ஏற்படவில்லை. காசநோய் எப்போதும் இருக்கும். அதற்கான தொற்றை கிள்ளான் பள்ளாத்தாக்கில் அமைச்சு கண்காணித்து வருகிறது.

இவ்விவகாரம் தொடர்பில் சுகாதார துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

அதனால் பதட்டம் ஏற்படும் அளவிற்கு உண்மையற்ற தகவலைப் பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாக 2023 உலக ஏ.எம்.ஆர். விழிப்புணர்வு வாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஸாலேஹா குறிப்பிட்டார்.