மைபி.பி.பி.யின் இடைக்கால தலைவரானார் டத்தோ லோக பாலா

262

பெட்டாலிங் ஜெயா, நவ.18-

மைபி.பி.பி.யின் தலைவர், டத்தோஸ்ரீ மெக்லின் டிக்ருஸ் நேற்று காலமானதைத் தொடர்ந்து கட்சியின் உதவித் தலைவர், டத்தோ லோக பாலமோகன் அதன் இடைக்கால தலைவராகப் பொறுப்பேற்பார் என்று கட்சியின் தலைமைச் செயலாளர், இண்டர் சிங் பீண்ட் சிங் தெரிவித்தார்.

கட்சியின் அரசியலமைப்புச் சட்டம், 9.10ஆவது விதிப்படி லோக பாலா இடைக்கால தலைவராக இருப்பார்.

ஒருவேளை கட்சியின் தலைவர் பதவி காலியாக இருந்தால் மூத்தத் தலைவர் அதற்கான பொறுப்பை ஏற்பார்.


இதே சட்டம் 9.3ஆவது விதிப்படி இந்த நியமனம் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆண்டுக் கூட்டம் நடைபெறும் வரை அமலில் இருக்கும்.
மெக்லின் டிக்ருஸ் திடீரென நேற்று காலமானதைத் தொடர்ந்து லோக பாலா ஒரு குறிப்பிட்ட கால கட்டம் வரை இடைக்கால தலைவராக இருப்பார் என்று ஓர் அறிக்கையில் இண்டர் சிங் குறிப்பிட்டார்.