கெர்லிங் குருகுலம்-சூரியன் ஆசிரம மாணவர்களின் தீபாவளி கொண்டாட்டம்

138

 

கோத்தா கெமுனிங், நவ.28-

இங்குள்ள  கோத்தா பெர்மாய் கோல்ஃப் கிளப்பில் நடைபெற்ற தீபாவளி விருந்து உபசரிப்பில் கெர்லிங்    தோட்டத் தமிழ்ப்பள்ளி குருகுல மற்றும் மைகீத்தா சூரியன் ஆசிரம மாணவர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர். 

இந்த விருந்தினை‌ ஏற்பாடு செய்த ஆசிரியர் வானதி ஆறுமுகம், ஆசிரியர்  கோகிலன் பாமதேவன்,  அவர்தம் குழுவினர் மற்றும் இதற்கு உறுதுணை புரிந்த அனைத்து நல்லுங்களுக்கும்  பள்ளி தலைமையாசிரியர் .சி. குமார் நன்றியினைத்  தெரிவித்துக்  கொண்டார்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சரின் தேசிய ஆலோசனை மன்ற உறுப்பினர் க.சுப்ரமணியம் , மைகீத்தா நிர்வாகத்தினர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மாணவர்கள் இப்படியொரு நிகழ்வில் கலந்து கொண்டது இதுவே முதன் முறையாகும் என்று மைகீத்தா ஆசிரம தலைவர் அ.கனகராஜா தெரிவித்தார். 

ஆடல், பாடல் மற்றும் மாயா ஜால வித்தை  போன்ற  படைப்புகள் தங்களுக்கு சிறந்த பொழுது போக்காக அமைந்து மகிழ்ச்சியையும்  மனநிறைவையும்  தந்ததாக இந்தத் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் விவரித்தனர்.