spot_img
10.6 C
London
spot_img
Home மலேசியா டிச.1 இல் தலைநகரில் தொடங்குகிறது அனைத்துலக கோபியோ மாநாடு!

டிச.1 இல் தலைநகரில் தொடங்குகிறது அனைத்துலக கோபியோ மாநாடு!

0
289

கோலாலம்பூர், நவ 28-

கோபியோ அனைத்துலக கண்காட்சி மற்றும் வர்த்தக உச்சநிலை  மாநாடு  வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை தலைநகர், உலக வர்த்தக மையத்தில்  நடைபெறவிருக்கிறது. 

இரண்டாம் நாளான டிசம்பர் 2ஆம் தேதி உலக வர்த்தக மையத்தின் மெர்டேக்கா அரங்கில் 25 ஆவது ஆண்டு நிறைவு விழா விருந்துபசரிப்பு மற்றும்  அனைத்துலக சிறந்த வர்த்தக விருது விழா நடைபெறும் என்று மலேசிய  கோபியோ அமைப்பின் தலைவர் குணசேகரன் ஸ்ரீரங்கன் தெரிவித்தார்.

இந்த  நிகழ்ச்சிகளில் மலேசியா, இந்தியா, மொரிஷியஸ், இலங்கை, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஃபிரான்ஸ், சிங்கப்பூர், குவைத், ஐக்கிய அரபு சிற்றரசு, தாய்லாந்து, இந்தோனேசியா , மியன்மார் உட்பட 15 நாடுகள் கலந்து கொள்ளும் என்று கோபியோ அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் விவரித்தார்.

இந்திய வம்சாவளியினர் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் இந்திய வம்சாவளியினரின் வர்த்தக மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கான முக்கிய உலக பாலமாக 2023 கோபியோ அனைத்துலக கண்காட்சி மற்றும் வர்த்தக உச்சநிலை  மாநாடு திகழும் என்று அவர் குறிப்பிட்டார்.

உரிம  வணிகம் (ஃபிரான்சைஸ்), புதிதாக வர்த்தகம் தொடங்குவோருக்கான வர்த்தக வாய்ப்புகள், புதுப்பிக்கும் சக்தி என பல்வேறு துறைகளில் பரந்து விரிந்து கிடக்கும் வாய்ப்புகளை இந்த கண்காட்சி மற்றும் உச்சநிலை மாநாடு வாயிலாகப் பங்கேற்பாளர்கள் தெரிந்து கொண்டு பயனடையலாம் .

” தங்களின் வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ள  வெளிநாடுகளின் வர்த்தக பேராளர்களிடமிருந்து அதிகமான அனுபவங்களை உள்நாட்டினர்  கற்றுக் கொள்ளலாம். ஆகையால், இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்ளும்படி குணசேகரன் கேட்டுக் கொண்டார்.

இந்த முக்கிய  நிகழ்ச்சிகளில் மனித வள அமைச்சர் வி.சிவகுமார், இந்திய வெளி விவகார அமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் உட்பட பல அமைச்சர்கள் சிறப்பு வருகை புரிவர் என்றும் அவர் சொன்னார்.

கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும்  அதே வேளையில் எதிர்காலத்தில் வெளிநாட்டு வாழ் இந்திய வம்சாவளியினர் மற்றும் அவர்தம் கூட்டணியினரிடையே உறவு பாலத்தை அமைப்பதற்கு 2023  கோபியோ அனைத்துலக கண்காட்சி மற்றும் வர்த்தக உச்சநிலை  மாநாடு பெரும் பங்கை ஆற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேல் விவரங்களுக்கு www.gopiointernational.com மற்றும்  011- 12402926 (வாட்சாப்)