பெட்டாலிங் ஜெயா, நவ.29-
பிறக்கப் போகும் புது வருடத்தின் பரிசாக ‘இனி எல்லாம் சுகமே’ எனும் தலைப்பில் ஸ்ரீ ஆசான்ஜியின் சிறப்புரை இடம் பெறவிருக்கிறது.
இந்நிகழ்ச்சி வரும் டிசம்பர் 11 ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு இங்குள்ள பிஜே சிவிக் செண்டரில் (எம்பிபிஜே) நடைபெறும்.
காலம் எதற்காகவும், யாருக்காகவும் காத்திருப்பதில்லை. ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’. மாற்றம் என்பது எங்கிருந்தோ வராது, நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும். பிறக்கப் போகும் புதிய வருடம் மகிழ்ச்சியானதாக அனைவருக்கும் அமைய இது ஒரு பரிசாக இருக்கும். சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும். அவ்வப்போது நம் வாழ்க்கைக்குப் புத்துணர்ச்சி தேவை. எண்ணங்கள் தெளிவாக இருந்தால், செயல்கள் நிறைவாக இருக்கும். இலக்கைச் சுலபமாக அடையலாம்.
நாம் ஏற்பாட்டில் நடைபெறும் “இனி எல்லாம் சுகமே” எனும் தலைப்பில் ஸ்ரீ ஆசான்ஜியின் உரையைக் கேட்க பொது மக்கள் அழைக்கப்படுகிறார்கள்.
வாய்ப்பு என்பது எப்போதும் கதவைத் தட்டாது. அது வரும்போது தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நுழைவு இலவசம்.
‘உன் வாழ்க்கை உன் கையில்’. குறிப்பிட்ட இடமே எஞ்சியிருப்பதால் ஏமாற்றத்தைத் தவிர்க்க 012-2332381 அல்லது 012-6392474 உடனடியாகப் பதிந்து கொள்ளும்படி பொது மக்களை மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கேட்டுக் கொண்டார்.
