தளவாடக் கிடங்கு இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் மரணம்! விசாரணை நடத்தும்படி மனித வள அமைச்சு உத்தரவு

70

புத்ரா ஜெயா, நவ 29-
நேற்று இரவு பினாங்கு பத்து மாங்கில் ஒரு தளவாடக் கிடங்கு இடிந்து விழுந்ததில் மூன்று வங்காளதேச கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இருவர் படுகாயமடைந்தனர். மேலும் நான்கு பேர் இன்னும் சிக்கிக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த இருவர் தற்போது பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொண்ட நான்கு பேரை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பினாங்கு காவல்துறை அறிவித்துள்ளது.

அந்தப் பகுதியில் உள்ள அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறும் மனிதவள அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.

இச்சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறியும்படி பினாங்கு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையின் (ஜேகேகேபி) புலனாய்வு அதிகாரிகள் குழுவினரை மனிதவள அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தின் கீழ் சட்டத் தேவைகள் மீறப்பட்டுள்ளதா என்பதைத் தீர்மானிக்க விரிவான விசாரணையை மேற்கொள்ளும்படியும் அமைச்சு உத்தரவிட்டுள்ளது.