இலவச டியூஷன் திட்டம்: ஆரம்பப்பள்ளிகளில் விரிவுபடுத்த டாக்டர் குணராஜ் திட்டம்

101

ஷா ஆலாம், டிச.2-
எண், எழுத்து, வாசிப்பு என்ற 3எம் விவகாரத்திற்குத் தீர்வு காண சிலாங்கூர் மக்கள் டியூஷன் திட்டத்தை (பி.டி ஆர்.எஸ்.) ஆரம்பப் பள்ளியிலிருந்து தொடங்க வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர், ஜி.குணராஜா வலியுறுத்தினார்.

தற்போதைய உலகமயமாக்கல் சகாப்தத்தில் இந்த 3எம்மிலும் தேர்ச்சி பெறுவதை சாதாரண ஒன்றாகக் கருதாமல் கல்வியறிவு கொண்ட சமூகத்தை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இந்த பிடி.ஆர்.எஸ். திட்டத்தை ஆரம்பப்பள்ளியிலிருந்தே தொடங்கி மாணவர்களுக்குக் கூடுதல் வகுப்புகளை நடத்த வேண்டும். இடைநிலைப்பள்ளிக்குச் செல்வதற்கு முன்பாக இவ்வாறு செய்வதன் மூலம் மாணவர்கள் பாதியிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திக் கொள்வதிலிருந்து தவிர்க்கலாம்.

அதோடு மட்டுமின்றி புதிய அல்லது மாறுபட்ட கற்றல்-கற்பித்தல் முறையைத் தெரிந்து கொள்ள ஒரு பள்ளியின் ஆசிரியர்கள் மற்ற பள்ளிக்குச் சென்று கற்றுக் கொடுக்க இந்த பி.டி.ஆர்.எஸ். பரிந்துரைக்கப்படுவதாக மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய போது குணராஜா குறிப்பிட்டார்.