மடானி அரசின் ஓராண்டு நிறைவு: 25% கழிவை பிராசாரானா வழங்குகிறது

108

கோலாலம்பூர், டிச.6-

    புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் வரும் 8 தொடங்கி 10ஆம் தேதி வரை மடானி அரசுடன் ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு புக்கிட் ஜாலில் எல்.ஆர்.டி. நிலையம் வரை செல்ல 25 விழுக்காடு கழிவு வழங்கப்படுவதாக பிராசாரானா நிறுவனம் தெரிவித்தது.

   இக்கழிவு புக்கிட் ஜாலில் எல்.ஆர்.டி. நிலையத்திற்குச் செல்ல அல்லது அங்கிருந்து திரும்பி வர டோக்கன் வாங்கும் அல்லது டச் என் கோ பயன்படுத்தும் அனைத்துப் பயணிகளுக்கும் கிடைக்கும்.

   இருந்த போதிலும் இதில் நடப்பிலுள்ள போக்குவரத்து அட்டை அல்லது ஒப்பந்த அட்டை பயன்படுத்துவோர் இக்கழிவுத் திட்டத்தில் உட்படுத்தப்பட மாட்டார்கள் என்று ஓர் அறிக்கையில் பிராசாரானா குறிப்பிட்டது.

-பெர்னாமா