ஸ்ரீ ராகம் பைன் ஆர்ட்ஸின் ‘இசை சமர்ப்பணம்’ நிகழ்ச்சி

325

கோலாலம்பூர், டிச.6-

ஸ்ரீ ராகம் ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ‘இசை சமர்ப்பணம்’ நிகழ்ச்சி வரும் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழக சிவிக் செண்டரில் நடைபெறவிருக்கிறது.

மாலை மணி 5.00 தொடங்கி இரவு 8.00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சுமார் 120 மாணவர்கள் பங்கேற்கவிருக்கின்றனர்.

வாய்ப்பாடு (38 பேர்), தபலா (15 பேர்), வீணை (60 பேர்), பரதம் (இருவர்), சிலம்பம், கரகாட்டம், தமிழ் நாதஸ்வரம் போன்ற படைப்புகளை மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் படைக்கவிருக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் நாட்டு கிராமிய கலைஞர் வேல் முருகன் சிறப்பு வருகை புரிகிறார்.

கீ போர்டு போன்ற இசைக் கலைஞர்களும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று ஸ்ரீ ராகம் ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தோற்றுனர் ஆசிரியர் மோகனப் பிரியா குறிப்பிட்டார்.

தபலா, வீணை போன்ற கிராமிய இசையை எப்படி நவீன முறையில் கையாள்வது என்பதை அடிப்படையாகக கொண்டு இந்நிகழ்ச்சி படைக்கப்படுவதாக அவர் சொன்னார்.

இதன் இலக்கு மலேசியாவில் பல்நோக்கு மற்றும் ஒருங்கிணைந்த இசைப்பள்ளியை மேம்படுத்த வேண்டும்; மக்களிடையே பாரம்பரிய இசை மீதான ஆர்வத்தை அதிகரித்து பல்வேறு கற்றல் முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதாகும்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு எங்களின் பாரம்பரியம், பண்பாடு, வாழ்க்கையோடு இணைந்திருக்கும் சங்கீதம், வீணை, தபேலா, பரதநாட்டியம் , இசையின் மதிப்பு மற்றும், இசைக்கருவிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஸ்ரீ ராகம் பைன் ஆர்ட்ஸ் நிறுவனம் அழைக்கிறது.


இந்நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு 0162159953 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.