கணக்கியல் துறையில் டிப்ளோமா பெற்றார் சோனியா நிவாஷினி!

216

சைபர்ஜெயா, டிச 6-

இங்குள்ள மல்டிமீடியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஜோகூர், கூலாயைச் சேர்ந்த சோனியா நிவாஷினி த/பெ குமரகுருபரன் கணக்கியல் துறையில் டிப்ளோமா பெற்றார்.

மலாக்கா மல்டிமீடியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இம்மாணவி இதே துறையில் இளங்கலை பட்டப் படிப்பு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

தனது டிப்ளோமா கல்விக்கு உறுதுணை புரிந்த அன்பு பெற்றோர் குமரகுருபரன்- ஜானகி உள்ளிட்ட குடும்பத்தினர், ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொண்டார் சோனியா நிவாஷினி.