பி.கே.ஆரிலிருந்து வெளியேறினார் சுரேந்திரன்!

59

பெட்டாலிங் ஜெயா, பிப்.7-

   வாக்குறுதி அளித்தபடி புதிய திட்டங்களை அமல்படுத்துவதில் பி.கே.ஆர். தோல்வியுற்றதைத் தொடர்ந்து அதன் முன்னாள் உதவி தலைவர் என்.சுரேந்திரன் அக்கட்சியிலிருந்து விலகினார்.

   முன்னதாக ஜசெகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவாவின் நிந்தனை விவகாரத்தில் கட்சி அமைதி காத்து வந்ததை தொடர்ந்து முன்னாள் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேந்திரன் கடந்த திங்கள்கிழமை தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

-எப்.எம்.டி.