பாடில்லா அமைச்சு “பெத்ரா”வாக பெயர் மாற்றம்!

44

பெட்டாலிங் ஜெயா, பிப்.8-

அமைச்சரவை நேற்று நடத்திய கூட்டத்தில் எரிசக்தி மாற்றம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் அமைச்சை எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சாக (பெத்ரா) பெயர் மாற்றம் செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்தப் பெயர் மாற்றத்திற்கான பரிந்துரை அதன் அமைச்சரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப் முன்வைத்தார். இது நாட்டின் எரிசக்தி மற்றும் நீர் துறைகளில் உருமாற்றத்தை ஏற்படுத்தும் அமைச்சின் பங்களிப்பு மற்றும் பொறுப்புகளைச் சித்தரிப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது.

இதன் அடிப்படையில் பெத்ராவின் பெயர் அமைச்சு சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களுக்கும் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்படும் என்று ஓர் அறிக்கையில் அமைச்சு குறிப்பிட்டது.

எரிசக்தி மாற்றம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் அமைச்சு கடந்தாண்டு டிசம்பர் 12ஆம் தேதி அமைச்சரவை மாற்றம் கண்ட போது அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-எப்.எம்.டி.