இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் நம்மிடையே ஒற்றுமை வேண்டும்! -டத்தோஸ்ரீ சரவணன்

83

கோலாலம்பூர், பிப்.8-

இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும்  நம்மிடையே ஒற்றுமை வேண்டும் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்தினார்.

இன்று சிப்பாங் தொகுதி மஇகாவின் நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியதில் மகிழ்ச்சி.

சிப்பாங் தொகுதியில் வாழும் இந்திய மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் நடத்தப்பட்ட இந்த விருந்து நிகழ்ச்சி பாராட்டத்தக்கது. 

மண்டபம் நிறைந்த கூட்டத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. தூற்றினாலும் போற்றினாலும் தொடர்ந்து இந்திய சமுதாயத்திற்கு உதவும் கட்சியாக ம.இ.கா விளங்கி வருகிறது.

இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் நம்மிடையே ஒற்றுமை இருந்தால்தான் நாம் வெற்றிபெற முடியும்.

வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது நம் இனமாக இருக்க வேண்டும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

இந்த விருந்து நிகழ்ச்சியை டத்தோ வீ.குணாளன் தலைமையிலான ம.இ.கா. சிப்பாங் தொகுதி ஏற்பாடு செய்தது.

இந்நிகழ்ச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிப்பாங் தொகுதியிலுள்ள ம.இ.கா. கிளைத் தலைவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.