புக்கிட் மெர்த்தாஜாம், பிப்.16-
அடுத்த வாரத்தில் நடத்தும் கூட்டத்தில் முதன்மை விவகாரங்களில் ஒன்றாக அரிசி விலை இடம் பெற்றிருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இக்கூட்டத்தை உண்மையில் முன்கூட்டியே நடத்தியிருக்க வேண்டும். இதை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்திருப்பதற்குக் காரணம் அரிசி கட்டுப்பாட்டு விலை போன்ற நெருக்குதலான விவகாரத்தை உட்படுத்துவதற்கு ஆகும்.
“என்.ஏ.சி.சி.ஒ.எல். கூட்டத்தை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்திருப்பதற்குக் கட்டுப்பாட்டிலுள்ள அரிசி விலையைத் தீர்மானிப்பதற்கு ஆகும்” என்றார்.
“இதன் விலை குறைவாக இல்லை என்றாலும் கையிருப்புகள் எங்கிருந்து கிடைக்கின்றன, குத்தகையாளர்கள் யார், அவர்களின் இலாபத் தொகை எவ்வளவு போன்றவற்றை மறு ஆய்வு செய்தால் அரிசி விலையைக் குறைக்க முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று இங்குள்ள பண்டார் பெர்டாவில் நடைபெற்ற மடானி மலிவு விலை திட்டத்தில் உரையாற்றிய போது தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் இவ்வாறு குறிப்பிட்டார்.
-பெர்னாமா




