லண்டன், ஜூலை.18 –

டென்னிஸ் உலகத் தரவரிசையில் விம்பிள்டன் வெற்றியாளர் பட்டத்தை வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 3 ஆவது இடத்திற்கும், ஸ்பெயினின் கார்பின் முகுருசா 5 ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஜூலை 3 ஆம் தேதி முதல் ஜுலை 16 ஆம் தேதி வரை லண்டன் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் முகுருசாவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

இந்த சாம்பியன் பட்டம் மூலம் டென்னிஸ் உலகத் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். இந்த தொடருக்கு முன் ரோஜர் பெடரர் 5 ஆவது இடத்தில் இருந்தார். தற்போது 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பெண்கள் தரவரிசையில் முகுருசா 15 ஆவது இடத்தில் இருந்து 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் 10 இடங்கள் முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

ஏஞ்சலிக் கெர்பர் 3 ஆவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். வீனஸ் வில்லியம்ஸ் 11 ஆவது இடத்தில் இருந்து 9 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

விம்பிள்டன் 2 ஆவது சுற்றிலேயே தோல்வியடைந்த கரோலினா பிளிஸ்கோவா நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த 23 ஆவது வீராங்கனை இவராவார்.