பார்சிலோனா, ஜூலை.18 –
ஸ்பெயினின் பார்சிலோனா கால்பந்து அணிக்கு புதிய ஆட்டக்காரர்கள் தேவைப்படவில்லை என அதன் பயிற்றுனர் எர்னெஸ்டோ வல்வார்டே தெரிவித்துள்ளார். பார்சிலோனா அணியில் தற்போது உள்ள ஆட்டக்காரர்களை தக்க வைத்து கொள்வதே சிறந்த வியூகமாக இருக்கும் என வல்வார்டே தெரிவித்தார்.
பார்சிலோனா அணியில் தற்போது இருக்கும் ஆட்டக்காரர்களின் அடைவுநிலையில் தாம் மனதிருப்தி அடைவதாக வல்வார்டே கூறினார். குறிப்பாக லியோனெல் மெஸ்சி, நெய்மார், லுவிஸ் சுவாரேஸ் ஆகிய மூவரும் பார்சிலோனாவின் மிக முக்கியமான ஆட்டக்காரர்களாக திகழ்கின்றனர் என அவர் சொன்னார்.
பார்சிலோனா கிளப்புடனான ஒப்பந்தத்தை மெஸ்சி நீட்டித்துள்ள வேளையில் அந்த அணியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்பதை வல்வார்டே மறுக்கவில்லை. லுவிஸ் என்ரிக்கே பார்சிலோனாவை வழிநடத்திய இரண்டு ஆண்டுகளில் மெஸ்சியுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
புதிய பருவத்தை முன்னிட்டு பிரான்சின் பாரிஸ் செயின் ஜெர்மைன் மத்திய திடல் ஆட்டக்காரர் மார்கோ வெராட்டியை பார்சிலோனா விலைக்கு வாங்க விருப்பதாக கூறப்படுகிறது.
