spot_img
11.6 C
London
spot_img
Home தேர்தல் “மக்கள் பிரதிநிதியாக மட்டும் இருக்க விரும்புகிறேன்” -பாங் சோக் தாவோ

“மக்கள் பிரதிநிதியாக மட்டும் இருக்க விரும்புகிறேன்” -பாங் சோக் தாவோ

0
303

உலு சிலாங்கூர், மே 4-

கோல குபு பாரு இடைத்தேர்தலையொட்டி பக்காத்தான் வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் ஙா கோர் மிங்கைச் சம்பந்தப்படுத்தி பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அஃபிஃப் பஹார்டின் வெளியிட்ட அறிக்கையை நிராகரித்த பக்காத்தான் வேட்பாளர் பாங் சோக் தாவோ, தாம் மக்களின் பிரதிநிதியாக மட்டுமே இருக்க விரும்புவதாக குறிப்பிட்டார்.

அஃபிஃப் கூறியதைப் போல் தாம் ஙாவின் பிரதிநிதி அல்ல என்றும் ஙா பெண்கள் தலைவராக இருக்கும் அதிகாரத்தைக் குறைக்கிறார் என்றும் தாம் கருதுவதாக அஃபிஃப் கூறியதை இதற்கு முன்பு வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சரின் பத்திரிகைச் செயலாளராக பணியாற்றிய பாங் மறுத்தார்.

“அரசாங்கத்தில் நான் சேவை செய்தது ஙாவிற்கு மட்டுமல்ல, எரிசக்தி அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் இயோ பீ யின்னின் சிறப்பு அதிகாரியாகக் கடந்த 2018 முதல் 2020ஆம் ஆண்டு வரை பணியாற்றினேன்” என்றார்.

“இந்த அனுபவம் எனக்குச் சேவை செய்ய மிகவும் முக்கியமாகும். நான் கோல குபு பாரு மக்களுக்கு மட்டுமே பிரதிநிதியாக இருக்க விரும்புகிறேன்” என்று தேர்தல் பிரச்சாரத்தையொட்டி நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பாங் சோக் தாவோ குறிப்பிட்டார்.

-எஃப்.எம்.டி.