சுவிட்சர்லாந்தில் “ரைஸ்” உலக தமிழ் தொழில்முனைவர் மாநாடு: டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் உட்பட 30 பேராளர்கள் பங்கேற்பு!

58

சுவிட்சர்லாந்து, ஜூன் 6-

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் உலகத் தமிழ் முனைவர் மாநாட்டில் பங்கேற்க மலேசியாவில் இருந்து 30 பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் தலைமையில் சுவிட்சர்லாந்து சென்ற மலேசிய பேராளர்கள் குழுவை டாக்டர் ஸ்ரீ ராஜமாணிக்கம் வரவேற்றார்.

இலங்கை தமிழரான இவர் இப்போது சுவிட்சர்லாந்து நாட்டில் லோஸிஸ்டிக் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

ரைஸ் எனப்படும் உலக தமிழ் முனைவர் மாநாட்டில் பல நாடுகளில் இருந்து தமிழர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் 30 பேர் அடங்கிய மலேசிய பேராளர் குழுவுக்கு டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் தலைமை ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகத் தமிழர்கள் மத்தியில் வர்த்தக முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.