spot_img
10.9 C
London
spot_img
Home மலேசியா இந்திய தொழில்முனைவர்களுக்கு பேங்க் ராக்யாட் வெ.50 மில்லியன் ஒதுக்கீடு! -டத்தோ ரமணன்

இந்திய தொழில்முனைவர்களுக்கு பேங்க் ராக்யாட் வெ.50 மில்லியன் ஒதுக்கீடு! -டத்தோ ரமணன்

0
216

கோலாலம்பூர், ஜூன் 6-

சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவர்கள் தங்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையில் பேங்க் ராக்யாட் இந்திய தொழில்முனைவர் நிதியம் (பிரீஃப்-ஐ) திட்டத்தில் 50 மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

பேங்க் ராக்யாட் தோற்றுவிக்கப்பட்ட 70 ஆண்டு காலத்தில் ஒட்டுமொத்த மலேசியர்களின் சமூக மேம்பாட்டில் அனைவரும் உள்ளடக்கியிருப்பதை இந்த பிரீஃப்-ஐ திட்டம் காட்டுகிறது என்று தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோ ரமணன் தெரிவித்தார்.

அதோடு மட்டுமின்றி வறுமையை முறியடிக்கும் அரசின் இலக்கை அடைவதற்கு இந்திய தொழில்முனைவர்களுக்கான வாய்ப்பாக இது அமைவதோடு சுபிட்சமான மற்றும் வளமான மலேசிய மடானி பொருளாதார இடைவெளியையும் குறைக்க வகை செய்யும்.

இந்த பிரீஃப்-ஐ இந்திய தொழில்முனைவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்திற்கு வித்திடும் ஒரு திட்டமாகும்.

ஆகையால், இந்திய தொழில்முனைவர்களை ஆதரவளிப்பதன் மூலம் அனைவருக்கும் மிக வளமான பொருளாதாரத்தை ஊக்குவிக்க முடியும் என்று இந்த பிரீஃப்-ஐ திட்ட அறிமுக விழாவில் உரையாற்றிய போது சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் குறிப்பிட்டார்.

-பெர்னாமா