spot_img
11.8 C
London
spot_img
Home சமூகம் உயர்கல்வி தொடர முதன்மை தேர்வாக திவெட்! -துணைப் பிரதமர் நம்பிக்கை

உயர்கல்வி தொடர முதன்மை தேர்வாக திவெட்! -துணைப் பிரதமர் நம்பிக்கை

0
187

கோலப்பிலா, ஜூன் 30-

எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெறாதவர்களுக்கு தொழில்திறன் பயிற்சி கல்வி (திவெட்) எப்போதும் முதன்மைத் தேர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இளம் தலைமுறையினருக்கு நல்ல வேலை வாய்ப்புகளை வழங்கும் இந்த திவெட் கல்வியை ஜப்பான், சீனா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் முதன்மைக் கல்வி முறையாகக் கருதுகின்றன என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில எஸ்பிஎம்மில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை, காரணம் தேர்வு எழுதாதவர்கள் அல்லது மோசமான தேர்ச்சிப் பெற்றவர்கள் கூட மெட்ரிகுலேஷன், அடிப்படை பயிற்சி மையம், திவெட் கல்விக்கும் விண்ணப்பிக்கலாம்.

உள்நாட்டு-வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏராளமானோருக்குப் பொறியியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் தேவைப்படுகின்றனர். இதன் காரணமாக நாடு முழுவதும் ஏராளமான திவெட் கல்வி மையங்களை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. திவெட்டில் முனைவர் பட்டப்படிப்பு வரை வாய்ப்பு வழங்குகிறது என்று கோலப்பிலா அம்னோ கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது இதன் தேசியத் தலைவருமான அகமட் ஸாஹிட் இவ்வாறு விவரித்தார்.

-பெர்னாமா