கோலாலம்பூர், ஜூன் 30-
கோலாலம்பூர், ஜூன் 30-
எஸ்.பி.எம். தேர்வில் மிகச் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன பேதம் பாராமல் மெட்ரிகுலேஷனில் உயர்கல்வி கற்பதற்கு இவ்வாண்டு தொடங்கி வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த முடிவு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
எனினும், பூமிபுத்ரா மாணவர்களுக்கு இதற்கு முன்பு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்றார் பிரதமர்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மக்களின் குறைகளைச் செவிமடுக்கப்பட்டதோடு தீர்மானம், பரிந்துரை மற்றும் தீர்வுகள் ஆராயப்பட்டன.
அந்த வகையில் எஸ்பிஎம் தேர்வில் 10 அல்லது அதற்கும் கூடுதலான ஏக்களைப் பெற்று சிறந்த தேர்ச்சிப் பெறும் அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்பு வழங்கப்படும் என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.
“இந்த அணுகுமுறையின் வாயிலாக நாட்டின் இன ஒற்றுமை மேலோங்குவதற்கு மற்றும் தேசப்பற்றை விதைப்பதற்குத் தற்காலிகமாகப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கலாம். எனக்கு இனி இப்பிரச்சனை ஓர் இனவாதப் பிரச்சனையாக இருக்கக் கூடாது” என்று புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான தேசிய பயிற்சி வாரத்திற்கான மாநாட்டில் உரையாற்றிய போது தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் பேசினார்.
-பெரித்தா ஹாரியான்





