கோலாலம்பூர், அக். 4-
நாட்டிலுள்ள இந்தியர்களின் நலன் காக்க சிறப்பு நிதியை அதிகரிக்கும்படி அரசாங்கத்தை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் எம். சரவணன் கேட்டுக் கொண்டார்.
இந்தியர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 130 மில்லியன் வெள்ளி போதாது என்றார் அவர்.
நாடாளுமன்றத்தில் விநியோக மசோதா மீதான விவாதத்தின்போது மஇகா தேசிய துணைத் தலைவருமான சரவணன் இந்தக் கோரிக்கையை முன் வைத்தார்.
421 மில்லியன் என மிகப் பெரிய பட்ஜெட்டை அண்மையில் பிரதமர் அறிவித்தார். எனினும், இந்தியர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட சிறப்பு நிதி அதிகரிக்கப்படவில்லை.
இவ்விவகாரம் மீது கூடுதல் கவனம் செலுத்தும்படி மடானி அரசாங்கத்தை சரவணன் கேட்டுக் கொண்டார்.