Homeசமூகம்நீரிழிவு நோயாளியின் குடும்பத்திற்கு சிலாங்கூர் மக்கள் சக்தி இளைஞர் பிரிவு தலைவர் கமலஹாசன் உதவி!

நீரிழிவு நோயாளியின் குடும்பத்திற்கு சிலாங்கூர் மக்கள் சக்தி இளைஞர் பிரிவு தலைவர் கமலஹாசன் உதவி!

செராஸ், நவ. 15-

நீரிழிவு நோயால் அவதியுற்று வரும் எம். அருள் என்பவரின் குடும்பத்திற்கு சிலாங்கூர் மக்கள் சக்தி கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் கமலஹாசன் உதவிகள் புரிந்துள்ளார்.

இங்குள்ள தாமான் தாமிங் ஜெயாவில் வசித்து வரும் அருளுக்கு (45) மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர்.

இவர் கடந்த 4 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் அவதியுற்று வருகிறார். கணவன்-மனைவி இருவருக்கும் வேலையில்லாத நிலையில் குடும்பத்தினர் மிகவும் சிரமமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களின் இக்கட்டான நிலையைக் கேள்வியுற்று இவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று இவர்களுக்குத் தேவையான மளிகை பொருள்களை வாங்கிக் கொடுத்துள்ளார் கமலஹாசன்.

அதே சமயம், இவர்களின் குடிநீர் துண்டிக்கப்பட்டதால் அதற்கான கட்டணத்தையும் செலுத்தி இவர்களின் சுமையைக் குறைத்தார்.

இக்குடும்பத்தினரின் பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும் வகையில் இத்தம்பதியரின் இரண்டாவது மகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் கமலஹாசன் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

இவ்வேளையில் கட்சி பணிகளில் தனக்கு ஆதரவு அளித்து வரும் மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர். எஸ். தனேந்திரன், துணைத் தலைவர் டத்தோ ஆர். கே. ரமேஷ் மற்றும் குகேஸ்வரன் ஆகியோருக்கு கமலஹாசன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

 

 

spot_img

latest articles

explore more