Homeசமூகம்பூச்சோங் 14ஆவது மைல் மாரியம்மன் ஆலய மண்டபத்திற்கு இப்போது முதல் பதிவு செய்யலாம்! -...

பூச்சோங் 14ஆவது மைல் மாரியம்மன் ஆலய மண்டபத்திற்கு இப்போது முதல் பதிவு செய்யலாம்! – டத்தோ ஏ. பி. சிவம்

பூச்சோங், நவ. 17-

இங்குள்ள 14 ஆவது மைல், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் பிரம்மாண்ட மண்டபத்திற்கு பொது மக்கள் இப்போது முதல் பதிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மண்டபத்தின் கீழ்த்தளம் பூர்த்தியான நிலையில் இதன் அறிமுக விழா நேற்று தீபாவளி விருந்துபசரிப்போடு நடைபெற்றதாக ஆலயத்தின் தலைவர் டத்தோ டாக்டர்

ஏ. பி. சிவம் கூறினார்.

“குளு குளு வசதியுடன் கூடிய மண்டபத்தின் கீழ்த் தளத்தில் 400 பேர் வரை அமரலாம். இதன் 1ஆவது மற்றும் 2ஆவது மாடி இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் பூர்த்தியாகிவிடும்” என்றார் அவர்.

ஆலய வளாகத்தில் விசாலமான வாகன நிறுத்துமிட வசதியும் உண்டு. இதன் பொருட்டு திருமண வைபத்தை ஆலயத்தில் நடத்திவிட்டு விருந்துபசரிப்பை பல வசதிகள் கொண்ட மண்டபத்தில் நடத்தலாம் என்று மண்டப நிர்வாக குழு தலைவருமான டத்தோ சிவம் விவரித்தார்.

இதில் கிடைக்கும் வருமானத்தில் தமிழ்ப்பள்ளி , பி40 பிரிவினர் மற்றும் ஆதரவற்ற இல்லங்கள் ஆகியவற்றின் நலன்களுக்குப் பயன்படுத்தப்படும் என்றார்.

spot_img

latest articles

explore more