மந்தின், நவ. 18-

இங்குள்ள ஸ்ரீ சாஸ்தா சேவை மையத்தின் கார்த்திகை மாத ஐயப்ப சுவாமி பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.

300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டார்கள். அதில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்திருந்தனர். சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

பராம் குருசாமி, வானவில் ராஜு குருநாதர் மற்றும் குருசாமிகளும், குருநாதர்களும் கன்னிசாமிகள் மணிகண்ட சாமிகளும், பக்தர்களும் இப்பூஜையில் கலந்து கொண்டனர்.
கவிமாறனும் கலந்து கொண்டு சமய உரையாற்றினார்.