கோலாலம்பூர், நவ.23-

விவிஎஸ்கே சிட்டி குளோபல் நிறுவனம் 24 குடும்பங்களுக்கு 8 வகையான பலகாரங்கள், 24 வகையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கியதோடு 5 குடும்பங்களுக்குத் தலா 100 வெள்ளி ரொக்கத்தையும் வழங்கியது.

இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தொழிலதிபருமான சரவணன் நெடுஞ்சாலை எல்இடி அறிவிப்புப் பலகைக்கான விளம்பரப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.  ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவி செய்வது உட்பட நிறைய பொதுச்சேவைகளிலும் இவர் ஈடுபட்டு வருகிறார்.

இந்தியா, தாகம் அறவாரியத்தின் வாயிலாக இந்தியா, புதுடில்லி மற்றும் பெங்களூரில் வீடில்லாத 160 பேருக்கு உணவளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இதே பணியை தலைநகர், புடுராயாவில் இதே நிலையில் உள்ள மக்களுக்கும் உணவு அளித்து அவர்களின் பசியைப் போக்கி வருகிறார்.

இது தவிர்த்து, பத்து கேவ்ஸ் தமிழ்ப்பள்ளிக்கு மேசை மற்றும் நாற்காலிகளை இவ்வாண்டு அன்பளிப்பு செய்துள்ளார்.