ஈப்போ, நவ. 27-
ஊத்தான் மெலிந்தாங், சிம்பாங் அம்பாட் நில பங்குதாரர்களுக்கான இழப்பீட்டு மனுவை தாக்கல் செய்வதற்கு விடுக்கப்பட்ட இரண்டு மாத கோரிக்கையை இங்குள்ள உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இவ்வழக்கில் பங்குதார்களின் சார்பில் வழக்கறிஞர் டி. பி. விஜேந்திரன் ஆஜராகியுள்ளார்.
இவர் விடுத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் அங்கீகரித்தது.
இவ்வழக்கு ஈப்போ உயர் நீதிமன்றத்தில் நீதிபதி டத்தோ பூபிந்தர் சிங் முன்னிலையில் இன்று மீண்டும் தொடங்கியது.
கடந்த 30 ஆண்டுகால போராட்டத்திற்கு விடிவெள்ளியாக இந்த வழக்கு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலத் திட்டத்தில் முதலீடு செய்த பங்குதாரர்களில் பதிவு செய்யப்பட்ட 217 பேருக்கான இழப்பீட்டு மனுவை தாக்கல் செய்யும் வழக்கறிஞர் டி. பி. விஜேந்திரனின் விண்ணப்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இந்த 217 பங்குதாரர்களுக்கும் இழப்பீடு வழங்குவதாக கடந்த 2014 ஆம் ஆண்டு கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இவ்வழக்கு பின்னர் ஈப்போ உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
இன்று இதன் மீதான வழக்கு தொடங்கிய போது இழப்பீட்டு மனு குறித்த விளக்கத்தை அளிக்கும்படி நீதிபதி டத்தோ பூபிந்தர் சிங் கோரியபோது இதற்கு இரண்டு மாத கால அவகாசத்தை வழங்கும்படி வழக்கறிஞர் டி.பி. விஜேந்திரன் கேட்டுக் கொண்டார்.