கோலாலம்பூர், நவ. 27-
அண்மையில் நடைபெற்ற மலேசிய இந்து சங்க மாநாட்டில் ஈப்போ, கம்போங் செக்கடி குங்குமாங்கி ஆலய தலைவர் செ. இலட்சுமணன்
‘சங்கபூசன்’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
இவர் மலேசிய இந்து சங்கத்தின் தேசிய தலைவர் ஸ்ரீ காசி சங்கபூசன் தங்க கணேசனிடமிருந்து இந்த விருதைப் பெற்றார்.
இந்து சங்கத்தின் மேம்பாட்டிற்காக இலட்சுமணன் ஆற்றி வரும் அளப்பரிய பங்களிப்புக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமய மற்றும் சமூக வளர்ச்சியின் பால் இவர் கொண்டுள்ள அக்கறை இந்த விருதுக்கு இவரை தகுதி பெறச் செய்துள்ளது.