பெட்டாலிங் ஜெயா, மார்ச் 3-சிலாங்கூர்,பெட்டாலிங் ஜெயா செலாத்தான் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் தமிழில் போற்றிப்பாடி “கும்பாபிஷேகம்” திருக்குட நன்னீராட்டு பெருவிழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள், தீபாராதனை, அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றன.

இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் திருவருளைப் பெற்றனர்.

இந்த ஆலய திருக்குட நன்னீராட்டு விழாவை பற்றிய செய்திகளை மூன்று வாரங்களுக்கு முன்பு ஊடகங்கள் வழி கவிமாறன் வெளியிட்டு இருந்தார்.

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறப்புக்குரிய இந்த ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் பெட்டாலிங் டின் மைனிங் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.