வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > சிறைக்கு வெளியே சசிகலா! வீடியோ இணைப்பு
இந்தியா/ ஈழம்மற்றவைமுதன்மைச் செய்திகள்

சிறைக்கு வெளியே சசிகலா! வீடியோ இணைப்பு

பெங்களுரூ, ஜூலை 18-

சசிகலாவிற்கு சிறையில் கிடைக்கும் ஜாலியான வாழ்க்கை போன்று சாமானிய சிறைக் கைதிகளுக்கு கிடைக்குமா? எவ்வளவு சுதந்திரமாக வெளியே சென்று சிறைக்கு திரும்புகிறார் சசிகலா. கருப்பு சுடிதார் போட்டுக் கொண்ட சசிகலா, பெண் போலீஸ் உதவியுடன் கடைக்கு சென்றுவிட்டு சிறைக்கு திரும்பி வருவது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சி தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை நடத்தும் விதமே வேறாக உள்ளது. தற்போது வெளியாகியுள்ள வீடியோவை பார்த்தால் இப்படித்தான் சிறை தண்டனை ஜாலியாக இருக்கும் போல என்று சிறைக்கு வெளியில் இருப்பவர்கள் நினைப்பார்கள். சசிகலா இருப்பது போன்று வெகு ஜாலியாக ஒரு சாதாரண சிறைக் கைதியால் இருக்க முடியுமா? அப்படி இருக்க வேண்டும் என்றால் அவர் சசிகலா போல் கோடி கோடி ஈஸ்வரியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சலுகைகள் கிடைக்காது.

சாமானிய ஏழையாக இருக்கும் கைதிகளுக்கு இது போன்ற சலுகைகள் வேண்டாம். அவர்களை குறைந்த பட்சம் மரியாதையோடு கூட சிறை அதிகாரிகள் நடத்துவதில்லை. பணம் இருந்தால் அனைத்து விதிகளையும் வளைக்க முடியும் என்பதற்கு சசிகலா சிறை வாழ்க்கை ஒரு மோசமான உதாரணம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன